Loading...
 

கிளப் உருவாக்கம் - சந்திப்பு வளாகத்தை அறிவது

 

சந்திப்பு வளாகத்தை அறிவது

(இந்த வழிமுறையானது நேரடி சந்திப்பை நடத்தும் கிளப்களுக்கு பொருந்தும்)

சந்திப்பு வளாகமானது பின்வரும் தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும்:

  • இது ஒப்பீட்டளவில் தனித்ததாகவும், அமைதியான இடமாகவும் இருக்க வேண்டும்
  • வருவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிற நபர்கள் சௌகரியமாக அமரும் வகையில் அந்த வளாகம் இருக்க வேண்டும்
  • வளாகமானது "மேடை" ஆக பயன்படுத்தக்கூடிய ஒரு தனி பகுதியைக் கொண்டிருக்க வேண்டும்.
  • அதிகமான நபர்கள் கலந்துகொள்வார்கள் என்று உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றால், வளாகத்தில் சுமார் 15 பேருக்கு இடம் இருப்பது ஆரம்பத்தில் போதுமானது.

 

வேறு ஏதேனும் இருந்தால் அது வரவேற்கத்தக்க கூடுதல் அம்சமாகும்:

  • தொலைகாட்சி, கணினியுடன் இணைக்கக்கூடியது அல்லது புரஜெக்டருடன் இணைக்கக்கூடியதாக இருந்தால் இன்னும் சிறப்பு.
  • "திரையரங்கம்"/"ஆடிட்டோரியம்", "வகுப்பறை" அல்லது "யு-ஸ்டைல்" அமைப்பில் (அல்லது உரிமையாளர்கள் அனுமதித்த வகையில்) அமைக்கப்பட்ட அறை  .
திரையரங்கம் வகுப்பறை யு-வடிவம்
Room 1 Room 2 Room 3

 

  • "மாநாடு", "விருந்து" மற்றும் "காலி சதுர" ஸ்டைல் அமைப்பில் உள்ளவைகளை தவிர்க்க முயற்சிக்கவும்:
மாநாடு விருந்து காலி சதுரம்
Room 6 Room 5 Room 4

 

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முற்றிலும் வேறுபட்ட பகுதிகளில் பார்வையாளர்கள் சீரற்ற முறையில் உட்காரக்கூடிய அமைப்புகளையும், பார்வையாளர்களுக்கும் பேச்சாளரின் இருப்பிடத்திற்கும் இடையில் தடுப்புகள் இருக்கும் வகையிலான அமைப்புகளையும் தவிர்க்க முயற்சி செய்யவும்:
வெவ்வேறு முறையில் பார்வையாளர்கள் அமர்ந்திருத்தல் தடுப்புகள்
Room 7 Room 8
  • உங்களுக்கு வசதி இருந்தால், சந்திப்பின் போது யாராவது அறைக்குள் நுழைந்தால் அல்லது வெளியேறினால் ஏற்படும் கவனச்சிதறல்களைத் தவிர்ப்பதற்காக பேசும் இடத்திலிருந்து நுழைவாயிலை முடிந்தவரை தொலைவில் வைப்பதற்கு முயற்சிக்கவும்.
கதவு பின்புறம் இருத்தல் கதவு முன்புறம் இருத்தல்
Room 9 Room 10

 

வளாகத்தைத் தேடும்போது, சந்திப்புகள் சுமார் 2 மணிநேரம் நீடிக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் (முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு).

சந்திப்பு வளாகங்களைத் தேர்வு செய்வதற்கான சில யோசனைகள்:

  • பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் அல்லது பிற பொது கட்டிடங்களில் இருக்கும் அறைகள். நாங்கள் இலாப நோக்கமில்லாத அமைப்பு என்பதாலும், நாங்கள் எந்த கட்டணமும் வசூலிக்க மாட்டோம் என்பதாலும், மேலும் எங்களது செயல்பாடுகள் மற்றும் சந்திப்புகள் கல்வி சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்பதாலும், இந்த நிறுவனங்கள் சந்திப்பு வளாகத்தை இலவசமாக வழங்கக்கூடும்.

    நமது அமைப்பின் இலாப நோக்கமற்ற தன்மையை நிரூபித்து, சந்திப்பிற்கான இடத்தை பெற உங்களுக்கு உதவும் வகையில் நாங்கள் சில அரசு அல்லது பொது நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமாக எழுத வேண்டும் எனில், நாங்கள் அதைச் செய்வோம். Info@agoraspeakers.org என்கிற மின்னஞ்சல் முகவரி வாயிலாக எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தயவுசெய்து நிறுவனத்தின் விவரங்கள் (முழு முகவரி) மற்றும் நாங்கள் கடிதம் அனுப்ப வேண்டிய நபரின் பெயர், மின்னஞ்சல் மற்றும் பதவி ஆகியவற்றை குறிப்பிடவும்.

    ஆதரவு கடிதங்களை ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் மட்டுமே எங்களால் வழங்க முடியும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • நீங்கள் பொருத்தமான நாளில் சந்திப்பு நேரத்தை திட்டமிட்டால், பல உணவகங்கள் அல்லது பார்கள், சந்திப்பில் கலந்து கொள்ளும் நபர்கள் உதாரணமாகப் பானங்கள் போன்றவற்றை வாங்கக்கூடும் என்பதால், அறையை உங்களுக்கு இலவசமாக வழங்கக்கூடும், இல்லையென்றால் அந்த நாளில் அவர்களின் இடம் எப்படியும் காலியாக இருக்கலாம். எனவே மீண்டும், இது இருபக்கத்திற்கும் சாதகமான விஷயமாக அமையும்: அவர்களும் சில வாடிக்கையாளர்களைப் பெறுகிறார்கள், உங்களுக்கும் தனிப்பட்ட அறை இலவசமாகக் கிடைக்கிறது.
  • சந்திப்புகளில் கலந்துக் கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் வேலை செய்யும் நிறுவனங்களும் தங்கள் அலுவலகங்களில் சந்திப்பிற்கான வளாகத்தை வழங்கக்கூடும்.
  • உங்கள் கிளப்பில் உள்ள உறுப்பினர்கள் மிகக் குறைவாக இருக்குமேயானால், நீங்கள் யாரேனும் ஒருவரின் வீட்டில் கூட சந்திப்புகளை நடத்தலாம்.
  • மேலே கூறப்பட்ட அனைத்தும் சாத்தியமாகவில்லை என்றால், நீங்கள் 2 மணிநேரத்திற்கு ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, சந்திப்பில் கலந்து கொள்ளும் அனைத்து நபர்களிடமும் செலவைப் பகிர்ந்து கொள்ளலாம். சில நகரங்கள் "எதிர்ப்பு கஃபேக்களை" வழங்குகின்றன, இதில் மக்கள் தங்கியிருக்கும் நேரத்தைப் பொறுத்து பணம் செலுத்தலாம், மேலும் வசதியான அறைகள், இலவச தேநீர் போன்றவற்றையும் அனுபவிக்கலாம்.
  • வேறு எந்த சாத்தியமும் இல்லை என்றால், வானிலையும் அதை அனுமதித்தால், நீங்கள் பூங்காவில் கூட சந்திப்பை நடத்தலாம். சந்திப்பை நடத்துவதற்கு நல்ல சௌகரியமான வளாகத்தை கொண்ட சில கிளப்புகள் கூட சில நேரங்களில் சில நோக்கங்களுக்காக வெளிப்புறங்களில் நடத்துகின்றன, சௌகரியமான பகுதியிலிருந்து மக்களை வெளியே கொண்டு வருவதற்கும், கிளப்பில் சேர வேண்டுமென்ற ஆர்வத்தை பலருக்கு ஏற்படுத்தவும் இவ்வாறு வெளிப்புறங்களில் நடத்தப்படுகின்றன.

 

மாட்ரிட்டில் உள்ள ரெட்டிரோ பூங்காவில் பார்லான்சின்ஸ் கிளப்பின் திறந்தவெளி சந்திப்பு
மாட்ரிட்டில் உள்ள ரெட்டிரோ பூங்காவில் பார்லான்சின்ஸ் கிளப்பின் திறந்தவெளி சந்திப்பு

 

நீங்கள் அந்த இடத்தில் தனியாக இல்லை என்பதையும், நீங்கள் ஒரு தயாரிப்பு அல்லது சேவையை விற்கவில்லை, "வாடிக்கையாளர்களுடன்" உரையாடவில்லை என்பதையும், அதற்குப் பதிலாக, மற்றவர்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு உதவும் சூழலை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். சந்திப்பிற்கான வளாகத்தைத் தேடும்போது அதில் ஆர்வமுள்ள அனைவரையும் ஈடுப்படுத்துங்கள். நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத யோசனைகளையும் பரிந்துரைகளையும் பெறலாம்.

ஆரம்ப சந்திப்புக்கு, தொடக்க செலவுகளை சாத்தியமானவரை குறைவாக வைத்திருக்க முயற்சி செய்யவும்.


Contributors to this page: shahul.hamid.nachiyar and agora .
Page last modified on Tuesday June 1, 2021 09:37:32 CEST by shahul.hamid.nachiyar.